Wednesday, December 25, 2024
HomeLatest Newsசிறுத்தைகள் நடமாட்டம்; கிரிவன்எலிய பகுதி மக்கள் பீதியில்!

சிறுத்தைகள் நடமாட்டம்; கிரிவன்எலிய பகுதி மக்கள் பீதியில்!

சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக நோர்டன்பிரிட்ஜ் – கிரிவன்எலிய பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்டன்பிரிட்ஜ் – ஏழு கன்னி மலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் சிறுத்தைகள் இரவு நேரங்களில் கிரிவன்எலிய கிராமத்தில் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள பல நாய்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரை தேடி சிறுத்தைகள் பிரவேசிப்பதன் காரணமாக நோர்டன்பிரிட்ஜ் – கிரிவன்எலிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Recent News