Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல் நாட்டு!

அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல் நாட்டு!

இந்நதியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கருவறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார்.

குறித்த நிகழ்வில் உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பின்னர், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

2023ஆம் ஆண்டுக்குள் கீழ் தளத்தில் ராமர் கோயில் கருவறை கட்டி முடிக்கப்படும் என ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் ரிபேந்திர மிர்ஸா தெரிவித்தார்.

அத்தோடு அதே ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News