Thursday, January 23, 2025
HomeLatest Newsஇத்தாலியில் நிலச்சரிவு : பலரின் நிலை தொடர்பில் அச்சம்!

இத்தாலியில் நிலச்சரிவு : பலரின் நிலை தொடர்பில் அச்சம்!

இத்தாலியில் நிலச்சரிவில் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் இதற்குமுன் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதுகுறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை என்ற இத்தாலிய உள்துறை அமைச்சர் நிலைமை மோசமடைந்துவருவதாகச் சொன்னார்.

நேப்பல்ஸ் (Naples) நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஷியா (Ischia) தீவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

காணாமற்போன மக்கள் சேற்றில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

தீவில் உள்ளோர் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மோசமான வானிலைக்கு இடையே தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன. 

Recent News