ஜார்ஜியாவில் உள்ள ஷோவி மலைப் பகுதியில் ராச்சா பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவால் அங்குள்ள பள்ளத்தாக்கில் சேறுகளுடன் மரங்கள், குப்பைகள் சரிந்து விழுந்திருப்பது தெரிய வருகிறது.
அத்தோடு சிலர் காணாமல் போயுள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஜார்ஜியாவின் பிரதமர் இராக்லி கரிபாஷ்விலி கூறியுள்ளார்.