அதிக குப்பைகளை சேகரிப்பவர்களிற்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டுள்ளமை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
காஷ்மீரின் சாதிவாரா கிராமத் தலைவர் அந்த கிராமத்தை சுத்தம் செய்வதற்காக புதிய யோசனையை கண்டுபிடித்துள்ளார்.
அதாவது, அதிக குப்பையை சேர்பவர்களிற்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்று புதிய போட்டியை அறிவித்துள்ளார்.
இதனால் கிராமவாசிகள் பலர் இந்த குப்பை சேகரிக்கும் போட்டியில் பங்குபற்றியுள்ளதுடன், இந்தப் போட்டியில் இரண்டு இளைஞர்கள் வென்று தங்க நாணயங்களை பெற்றுள்ளனர்.
அத்துடன், இந்தப் போட்டியின் மூலம் கிராமத்தில் தூய்மைக்கான தன்னார்வ சிந்தனையும் மக்களிடம் உருவாக்கியுள்ளது.
கிராமத்தலைவரின் மனைவி கொடுத்த யோசனையின் மூலம் குப்பைமேடாக காட்சியளித்த சாதிவாரா கிராமம் தற்போது சுத்தமாக உள்ளதாக அந்தக் கிராமத்தின் தலைவர் ஃபரூக் அகமது கனே தெரிவித்துள்ளார்.