அவுஸ்ரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக காணப்பட்டு வந்த கடுமையான பயண போக்கு வரத்துச் சட்டங்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் உள்வாங்கல்கள் நிறுத்தப்பட்டு இருந்தமை தொடர்பில் தற்போது அவுஸ்ரேலிய அரசாங்கம் மிகப் பாரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மிக விரைவில் அவுஸ்ரேலியாவில் சுமார் 1 மில்லியன் தொழிலாளர்களுக்கான வெற்றிடம் காணப்படப் போவதாகவும் அவற்றை நிரப்புவதற்கு தகுந்த தொழிலாளர்கள் நாட்டிற்குள் இல்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் வேலை வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பித்தவர்களில் சுமார் 914,000 ( ஒன்பது லட்சத்தி பதிநான்காயிரம்) விண்ணப்பங்கள் இன்னும் முடிவின்றி தேங்கியிருப்பதாகவும் அத்துடன் புலம் பெயர்ந்து வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவதுடன். கல்வியை நிறைவு செய்தவர்களும் திருப்பி அனுப்பப்படும் நிலை காணப்படுவதால் பல தொழிற்துறை நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக அவுஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே அரசாங்கம் தேங்கியுள்ள விண்ணங்களுக்கு விரைவில் ஒரு தீர்வைக் கொடுக்கும் பட்சத்தில் பல நிறுவனங்களில் காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்க முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.