முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாய ராஜாக்ஷவிற்கு தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தாய்லாந்து பிரதமர் நேற்று கூறியியிருந்தார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜபக்ஷவின் சார்பில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்திடம் இந்த விசா கோரிக்கையை முன்வைத்ததாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
அவர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அவருக்கான பல செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரையும் அவரது மனைவியையும் ஏற்றிச் செல்ல விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.