மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
மாலைதீவின் சக்திவாய்ந்த தொழிலதிபரும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரின் நெருங்கிய நண்பருமான முகமது அலி ஜானாவுக்கு சொந்தமான ஹோட்டலியே கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருந்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அங்கு தங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்கு அந்த ஹோட்டலின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஹோட்டல் மாலைதீவில் உள்ள விலையுயர்ந்த ஹோட்டல்களில் ஒன்றாகும். அதற்கமைய, அங்கு ஒரு இரவைக் கழிக்க, 5903 முதல் 8760 அமெரிக்க டொலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாலைதீவு சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் நஷீட் நேற்று காலை இந்த ஹோட்டலுக்குச் சென்று ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் பலருடன் அங்கு நீண்ட நேரம் செலவிட்டார் என தெரியவந்துள்ளது.
மிகவும் பாதுகாப்பாக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் சவுதி அரேபிய விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக வெலினா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தனர்.