Tuesday, December 24, 2024
HomeLatest Newsகோட்டா கோ ஹோம் முக்கிய செயற்பாட்டாளர்கள் பிணையில் விடுதலை!

கோட்டா கோ ஹோம் முக்கிய செயற்பாட்டாளர்கள் பிணையில் விடுதலை!

கோட்டா கோ ஹோம்” முக்கிய செயற்பாட்டாளர்களான லஹிரு வீரசேகர, வண. ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் மற்றும் யூடியூபர் ரதிந்து சேனாரத்ன அல்லது ரட்டா ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுன் மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றங்களுக்காக அவர்கள் தேடப்பட்டனர்.

மருதானை பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட அவர்கள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கோட்டை நீதவான் நீதிமன்றம் அவர்களை இன்று சொந்த பிணையில் விடுவித்தது.

Recent News