Tuesday, December 24, 2024
HomeLatest Newsபுவியின் அழகு ராணியாக கொரியா பெண் தெரிவு!

புவியின் அழகு ராணியாக கொரியா பெண் தெரிவு!

2022 புவி அழகுராணியாக (Miss Earth – மிஸ் ஏர்த்) தென் கொரியாவின் மீனா சூ சோய் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

உலகின் பிரதான அழகுராணி போட்டிகளில் ஒன்றான மிஸ் ஏர்த் போட்டிகளின் இவ்வருட அத்தியாயத்தில் 86 போட்டியாளர்கள் பங்குபற்றினர்.

இப்போட்டிகளின் இறுதிச் சுற்று  பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் தென் கொரியாவின் மீனா சூ சோய் முதலிடம் பெற்று, மிஸ் ஏர்த் 2022 அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.

அவருக்கான கிரீடத்தை கடந்த வருடம் மிஸ் ஏர்த் அழகுராணியாகத் தெரிவாகியிருந்த பெலிஸ் நாட்டின் அழகுராணி டெஸ்டினி வாக்னர் அணிவித்தார்.

2ஆம் இடம் பெற்ற அவுஸ்திரேலியாவின் ஷெரீதான் மோர்ட்லொக் மிஸ் ஏர்த் எயார் அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.

3 ஆம் இடம்பெற்ற பலஸ்தீனிய அழகுராணி நதீன் அயூப் மிஸ் ஏர்த் வோட்டர் அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.

4 ஆம் இடம்பெற்ற கொலம்பியாவின் அண்ட்ரியா அகுய்லேரா  மிஸ் ஏர்த் -ஃபயர் அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.

கடந்த 2 வருடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மிஸ் ஏர்த் அழகுராணி போட்டி இணைய வழியில் நடைபெற்றது. இம்முறை நேரடியாக அழகுராணிகள் போட்டிக்கு சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News