Monday, December 23, 2024
HomeLatest Newsஇதுவரை பார்த்திடாத மகளின் படங்களைப் பகிர்ந்த கோலி - அனுஷ்கா - வைரலாகும் கியூட் போட்டோஸ்!

இதுவரை பார்த்திடாத மகளின் படங்களைப் பகிர்ந்த கோலி – அனுஷ்கா – வைரலாகும் கியூட் போட்டோஸ்!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தம்பதி தங்களது செல்ல மகள் வாமிகாவின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தனது மகளின்  இரண்டாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி , விராட் கோலி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இதுவரை நாளும் பகிர்ந்துகொள்ளாத தனது செல்ல மகளின் புகைப்படத்தைப் பகிர்ந்து எனது இதயத்துடிப்புக்கு 2 வயது என்று பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர், கீழே படுத்திருக்க, அவரது செல்ல மகள் வாமிகா, அவர் மீது விளையாடிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் வாமிகாவின் தாய், அனுஷ்கா ஷர்மா தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது இதயம் விரிவடைந்தது என்று இந்த புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட நொடிப்பொழுது  முதல், அவரது ரசிகர்கள் தங்களது கமெண்ட்ஸினை குவித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Recent News