Thursday, January 23, 2025
HomeLatest Newsஆடம்பரத்தின் உச்சத்தில் கோலி – அனுஷ்கா ஷர்மாவின் அலிபாக் பங்களா-வைரலாகும் புகைப்படங்கள்

ஆடம்பரத்தின் உச்சத்தில் கோலி – அனுஷ்கா ஷர்மாவின் அலிபாக் பங்களா-வைரலாகும் புகைப்படங்கள்

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இந்தியாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் இந்தாண்டு செப்டம்பர் மாதம் மும்பை அலிபாக்கில் ஆடம்பரமான ஒரு பங்களாவை வாங்கினார்கள்.அது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், தற்போது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்களின் ஆடம்பர பங்களாவின் உள்ளபடங்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாளிகையானது உள்துறை வடிவமைப்பாளரான சுசானே கான், என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆடம்பர மற்றும் மினிமலி சத்தின் சிறந்த இணைப்பாக உள்ளது.

இந்த பங்களாவின் படங்கள் இணையத்தில் வெளிவந்தவுடன், அவை சமூக வலைதளத்தில் வைரலாகிவிட்டன. மேலும் ரசிகர்கள் பங்களாவைப் பற்றி வர்ணித்து வருகிறார்கள்.

இந்த பங்களா மரத்தாலான தளம் மற்றும் ஒரு பசுமையான தோட்டத்தால் சூழப்பட்ட வெளிப்புற குளம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  மேலும்  ஒளியைப் பெறும் பல பகுதிகள் உள்ளன.மேலும் உட்புறம் விசாலமாகவும் நன்கு காற்றோட்டமாகவும் தோன்றுகிறது. கூடுதலாக புல்லுருவிகள் மற்றும் பூக்களால் மூடப்பட்ட கூரையுடன் ஒரு வெளிப்புற இருக்கை பகுதி உள்ளது.குறித்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Recent News