Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅது தெரியுது எழும்பிட்டு இரு – மகேஸ்வரியின் மானத்தை வாங்கிய மாஸ்டர்!

அது தெரியுது எழும்பிட்டு இரு – மகேஸ்வரியின் மானத்தை வாங்கிய மாஸ்டர்!

பிக்பாஸ் சீசன்06 நிகழ்ச்சி நாளுக்க நாள் சுவாரசியங்கள் நிறைந்ததாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான நிலையில் போட்டியாளர்களிடையே சண்டை பாசம் அழுகை என பல்வேறு உணர்வுகளும் இடையிடையே தோன்றி வருகின்றது.


இவ்வாறான நிலையில் பிக்பாஸ் பெண் போட்டியாளர்களும், ஆண் போட்டியாளர்களும் சம அளவில் இருக்கும் பிக்பாஸ் வீட்டில், ஏற்கனவே கேமராக்களும் சுத்தி இருப்பதானால் பெண்கள் பலரும் அதிக கவனமாகவே செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் அதையும் மீறி சக போட்டியாளர்களே எங்களை ஒரு மாதிரி பார்க்கின்றனர் என்ற அச்ச உணர்வு வந்து விட்டால், அவர்களால் தொடர்ந்து கேமை தொடர முடியுமா? என்பது சந்தேகம் தான் என நேற்று நடந்த நிகழ்வு குறித்து ஒரு விவாதமே சோஷியல் மீடியாவில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

அதாவது சோபாவில் கவுன் அணிந்து கொண்டு அமர்ந்திருந்த மகேஸ்வரியை அங்கே வந்த ராபர்ட் மாஸ்டர், ஒரு நிமிஷம் எழுந்து நில்லு என்று கூறினார். என்ன சொல்லப் போறாரோ என தெரியாமல் எழுந்து நின்றதும், “இப்போ இறங்கிடுச்சு” என பச்சையாக ரொபேர்ட் மாஸ்டர் பேசியதை பிக்பாஸ் ரசிகர்கள் மிகவும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

மேலும் “யாருடா அது தொடையை காட்டிட்டு உட்கார்ந்து இருக்கிறதுன்னு பார்த்தேன். அதான் வந்து எந்திரிக்க சொன்னேன்” என ராபர்ட் மாஸ்டர் பேசியதும், என்ன தொடை தெரியுதான்னு மகேஸ்வரி கோபமே பட்டார். ஆனால், மாஸ்டர் வயதில் மூத்தவர் என்பதால் மகேஸ்வரி அவருடன் பெரிய அளவில் சண்டை போடவில்லை.

பிக்பாஸ் வீட்டைப் பொறுத்தவரையில் ஏகப்பட்ட ஆண் போட்டியாளர்கள் வெறும் டவுசரை அணிந்து கொண்டு வலம் வருகின்றனர். மகேஸ்வரியின் தொடை தெரியுதுன்னு பேசிய ராபர்ட் மாஸ்டரே பேன்ட் அணியாமல் டவுசர் தான் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் எப்படி அப்படி பேசலாம் என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது ராபர்ட் மாஸ்டர் கேமராவில் ஆபாசமாக தெரிந்து விடக் கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்யவே மகேஸ்வரியிடம் அப்படி நடந்து கொண்டார் என்றும் அதனால் தான் மகேஸ்வரி அவரிடம் சண்டை பிடிக்கவில்லை என்றும் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எது எவ்வாறாயினும் என்ன இருந்தாலும், ராபர்ட் மாஸ்டர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பலரும் கமெண்டுகளின் வாயிலாக அவரைக் கண்டித்து வருகின்றனர்.

Recent News