Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉயிரைப் பறிக்கும் பாராசிட்டமால் மாத்திரை !

உயிரைப் பறிக்கும் பாராசிட்டமால் மாத்திரை !

தற்போதைய கால கட்டத்தில் காய்ச்சல் தலைவலியினால் பாதிக்கப்படும் பெரும்பாலான மனிதர்கள்பாராசிட்டமாலினை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

பாரசிட்டமால் மாத்திரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாதாரணமாக எடுத்தக் கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு எடுத்துக்கொள்வது உயிருக்கே ஆபத்து விளைவிக்கின்றது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

பாரசிட்டமோல் மாத்திரை எடுத்துக் கொள்ளும் அளவை முக்கியமாக அவதானிக்க வேண்டும். குழந்தைகளுக்குஅதனை குறைவாகவே கொடுக்க வேண்டும்.

மருத்துவர்கள் கூறும் இடைவெளியுடன் தான் குறித்த மாத்திரையை கொடுக்க வேண்டும். குறைவான இடைவெளியில் மாத்திரையைக் கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.ஏனெனில் குழந்தைகளுக்கு அளவுக்கதிகமாக பாராசிட்டமால் மாத்திரையைக் கொடுத்தால், கல்லீரல் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், சில தருணங்களில் உயிரையும் பறிக்கின்றது.

இதனால் தான் மருத்துவர்களும் பாராசிட்டமால் பாய்சன் என்று கூறுகின்றனர். ஆதலால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அளவினை நீங்களே தீர்மானிக்க வேண்டாம்.

தவிர்க்க முடியாமல் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, பசியின்மை, மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல் என்ற அறிகுறிகள் ஏற்படும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை உடனே அனுகவும்.

பிற செய்திகள்

Recent News