Wednesday, April 2, 2025
HomeLatest NewsAI தொழில்நுட்பத்தில் கில்லாடி என்றால் கோடி கணக்கில் சம்பளம்..!காத்திருக்கும் அதிஷ்டம்..!

AI தொழில்நுட்பத்தில் கில்லாடி என்றால் கோடி கணக்கில் சம்பளம்..!காத்திருக்கும் அதிஷ்டம்..!

ChatGPT நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு ரூபாய் 1.5 கோடி வரை சம்பளம் கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 91 சதவீத நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் காணப்படுவதால் ChatGPT நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்களை பணியமர்த்த விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

AI ஆனது உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்றும் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ChatGPT 2022 ஆம் ஆண்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தொழில்நுட்ப உலகில் பேசப்பட்டு வருகின்றது.

AI சாட்பாட் மனிதனைப் போன்று பதிலளிக்கும் மற்றும் அதன் மீது வீசப்படும் அனைத்தையும் கையாளும் திறனுக்காக பெரும் புகழ் பெற்றதாக காணப்படுகின்றது.

அத்துடன், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவது முதல் இசையமைப்பது வரை, AI சாட்போட்டைப் பயன்படுத்துவதற்கு மக்கள் விரைவில் பல வழி வகைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில், தொழில்நுட்பத் துறையில் ChatGPT தேவையாகி வருவதுடன் AI சாட்போட்டைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு வேலைகள் என்று வரும் பொழுது அதிகளவு விருப்பங்கள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ரெஸ்யூம் பில்டரின் ஆய்வில், 91 சதவீத நிறுவனங்கள் வேலை காலியிடங்களைக் கொண்டுள்ளதால் ChatGPT நிபுணத்துவம் உடைய நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு விரும்புவதாக கண்டறியப்பட்டுள்ளது.

Recent News