Wednesday, December 25, 2024
HomeLatest NewsIndia Newsகடத்தல் நாடகமாடி காதலனுடன் விமானத்தில் பறந்த சிறுமி...!அதிர்ச்சியடைந்த பெற்றோர்...!

கடத்தல் நாடகமாடி காதலனுடன் விமானத்தில் பறந்த சிறுமி…!அதிர்ச்சியடைந்த பெற்றோர்…!

சிறுமி ஒருவர் தன்னை யாரோ கடத்தி விட்டதாக நாடகமாடி காதலனுடன் விமானத்தில் வெளிமாநிலம் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் பஹல்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு பிரிவில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத காரணத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர்.

இவ்வாறிருக்கையில், அந்த சிறுமி தனது சகோதரனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தன்னை யாரோ கடத்தி விட்டதாக வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதனால் மேலும் பீதியடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாரிடம் புகாரளிக்க வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சிறுமியின் செல்போன் எண்ணை கொண்டு விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

இதையடுத்து, விசாரணையின் போது காதலனுடன் சிறுமி விமானத்தில் கொல்கத்தா சென்றுவிட்டு தன்னை யாரோ கடத்தியது போல் நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

அதாவது, சிறுமி தனது காதலனுடன் மும்பையில் இருந்து விமானத்தில் மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்றுள்ளார்.

இதனால், மும்பை பொலிஸார் சிறுமி மற்றும் அவரது காதலனை தேடி கொல்கத்தா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News