Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsவெளியேறிய இஸ்ரேல் ராணுவம் - சிதைந்து போனதாக கான் யூனிஸ் - மக்கள் வேதனை..!

வெளியேறிய இஸ்ரேல் ராணுவம் – சிதைந்து போனதாக கான் யூனிஸ் – மக்கள் வேதனை..!

கான் யூனிஸ் நகர் மீது தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் முடிவடைந்து விட்டதாக கூறி கான்யூனிஸ் நகரில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியுள்ளது.இதனால் கான் யூனிஸ் நகரில் வசித்த வந்த மக்கள் தங்களுடைய சொந்த நகருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். ஆனால் கான் யூனிஸ் நகர் தனது அடையாளத்தை இழந்துள்ளது. கட்டடங்கள் இருந்த இடம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளன.

வீடுகள் இருந்த சுவடே தெரியவில்லை என நேரில் சென்று பார்த்த பாலஸ்தீனர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்துள்ளனர்.கான் யூனிஸ் நகரில் பல பகுதிகள் குறிப்பாக நகரின் மையப் பகுதிகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறியுள்ளது. வீடுகள் கட்டடங்கள் என அனைத்தும் தரைமட்டமாகியுள்ளன. இஸ்ரேல் ராணுவம் எதையும் அந்த பகுதியில் விட்டுச் செல்லவில்லை.வாழ்வதற்கான ஏதும் அங்கு இல்லை என்று அப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Recent News