கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவின் குடியிருப்பு முகவரி குறித்த தகவலுக்கு 10,000 டாலர் வெகுமதியை வளக்கவுள்ளதாக தடை செய்யப்பட்ட அமைப்பான சீக் ஃபார் ஜஸ்டிஸ் என அழைக்கப்படும் SFJ தெரிவித்துள்ளது .
இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை இராஜதந்திர முயற்சிகளை சீர்குலைப்பதையும், நாடுகளுக்கு இடையே பதட்டங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது, சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு எஸ்.எஃப்.ஜே பழிவாங்க முயல்கிறது.
நிஜ்ஜாரின் கொலை உலகளவில் சீக்கிய பிரிவினைவாதிகளின் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது.
இந்த நடவடிக்கை இந்திய இராஜதந்திரிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பும் விதத்தில் அமைகிறது .