Wednesday, December 25, 2024
HomeLatest Newsகளனி பல்கலைக்கழக பட்டதாரி கழுத்து வெட்டிக் கொலை

களனி பல்கலைக்கழக பட்டதாரி கழுத்து வெட்டிக் கொலை

தெல்கொட – கந்துபொட பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த 42 வயதான திருமணமாகாத பெண் ஒருவர் தனது வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மீஹகவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்துபொட பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில், உயிரிழந்தவர் நிர்மாணித்த இரண்டு மாடி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் அவரது சகோதரி, உயிரிழந்தவரின் வீட்டில் விளக்கு எரியாமல் இருந்தமை மற்றும், தொலைபேசி அழைப்புக்கு பதில் கிடைகாமை போன்ற காரணங்களால் அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் மாடி அறையில் உள்ள படுக்கையில் தனது சகோதரி வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி இனங்காணப்பட்டுள்ளதாக மீஹகவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களனி பல்கலைக்கழக பட்டதாரி எனவும் அவர் அரசாங்க நிறுவனம் ஒன்றில் கடமை புரிவதும் தெரிய வந்துள்ளது.

Recent News