Tuesday, December 24, 2024
HomeLatest NewsIndia Newsசென்னை விமான நிலையத்தினை அழகு செய்யும் கார்த்திகை பூ..!

சென்னை விமான நிலையத்தினை அழகு செய்யும் கார்த்திகை பூ..!

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் காந்தள் மலர் (கார்த்திகை பூ) நிறுவப்பட்டுள்ளது.

குறித்த காந்தள் மலரானது தமிழ்நாட்டின் மாநில மலர் என்ற சிறப்பினையும் பெறுகின்றது. இந்நிலையில் இது சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கந்தாள் மலராது சங்க இலக்கியங்களில் 64 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் எட்டுத்தொகையின் எட்டு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள பூ மற்றும் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 வகையான பூக்களில் முதன் முதலில் கூறப்பட்ட பூ என பல சிறப்புகளை பெறுவதுடன் கார்த்திகை மாதத்தில் பூப்பதால் கார்த்திகைப்பூ எனவும் அழைக்கப்படுகின்றது.

அத்துடன் கலை மற்றும் இலக்கிய மதிப்பு கொண்டமையால் குளோரியோசா லில்லி எனவும் அழைக்கப்படுகின்றது.

Recent News