Tuesday, December 24, 2024
HomeLatest Newsபொருட்களை ஏற்றும் பணிக்கு கரியல் சைக்கிள்கள் மீண்டும்!

பொருட்களை ஏற்றும் பணிக்கு கரியல் சைக்கிள்கள் மீண்டும்!

எரிபொருள் பற்றாக் குறைகள் தீவிரமாகத் தீவிரமாக சைக்கிள்களின் பன்முகப் பாவனைகள் கூடிக் கூடிச் செல்கின்றன.

இரும்புக் கரியல் சைக்கிள்களின் பாவனைகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. சைக்கிள் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் கம்பனிகளை விட உள்ளுர் தயாரிப்பான இரும்புக் கரியல் அதிக பாரங்களைத் தாங்கக் கூடியது.

முறியாது.50 முதல் 80 கிலோ கிராம் பாரத்தைக் கூடச் சாதாரணமாகக் கொண்டு செல்லலாம்.

பொருளாதாரத் தடை நிலவிய போர்க் காலங்களில் நீண்ட பல வருடங்கள் இரும்புக் கரியல் சைக்கிள்கள் பொதுமக்களுக்குப் பெரிதும் கைகொடுத்தன.

இப்போதும் தமக்கு கைகொடுக்கும் தோழனாக உள்ளதெனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Recent News