Wednesday, December 25, 2024
HomeLatest NewsWorld Newsஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த கமி ரீட்டா!

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த கமி ரீட்டா!

நேபாளத்தில் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், கடல் மட்டத்திலிருந்து 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ளது, இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும். நேபாளத்தை சேர்ந்த கமி ரீட்டா 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார். எவரெஸ்ட் மலையடிவாரத்தில் ஷெர்பா சமூகத்தை சேர்ந்தவர் கமி ரீட்டா. போர்ட்டராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் பின்னர் மலையேறுதல் வழிகாட்டியாக மாறினார். அவர் எவரெஸ்ட் சிகரத்தை முதன்முறையாக 1994இல் தனது 24 வயதில் ஏறினார். கின்னஸ் புத்தகத்தின் படி, ‘எவரெஸ்ட் மேன்’ என்றும் அழைக்கப்படும் கமி ரீட்டா ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், கொரோனா தொற்றுநோய் காரணமாக நேபாளத்தில் எவரெஸ்டின் தெற்குப் பகுதி ஏறுபவர்களுக்கு மூடப்பட்டு, 2021 இல் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது, மே 2021 இல் காமி ரீட்டா தனது 25ஆவது ஆண்டாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து மீண்டும் சாதனை படைத்தார்.

2023 இல், கமி ரீட்டா எவரெஸ்ட் சிகரத்தை 27ஆவது முறையாக ஏறி, சக வழிகாட்டியான பசாங் தாவா ஷெர்பாவுடன் சாதனையை சமன் செய்தார். தொடர்ந்து அந்தாண்டு மே மாதமே காமி ரீட்டா தனது 28ஆவது எவரெஸ்ட் ஏறுதலை முடித்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்தார்.

Recent News