Monday, January 27, 2025
HomeLatest Newsசிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பிய கமல்ஹான்- அப்போ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவாரா ?

சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பிய கமல்ஹான்- அப்போ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவாரா ?

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகின்றார்.இவர் கடந்த புதன்கிழமை திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இவர் ஹைதராபாத் சென்று, சென்னை திரும்பிய நிலையில் காய்ச்சல், ஜுரம், மற்றும் சளி பிரச்சினையின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.இதனால் ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனுக்கு என்ன நடந்தது என்று கேட்டு வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் நேற்று மதியம் ராமச்சந்திரா மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்டு அதில் கமல்ஹாசனின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் “ஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் லேசான காச்சல், இருமல், மற்றும் சளி பிரச்சினையின் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் நன்கு உடல் நலம் தேறி வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து தற்பொழுது வெளியாகியிருக்கும் தகவலின் படி கமல்ஹாசன் சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நாளைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Recent News