பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே பல ரசிகர்கள் காத்து கிடக்கின்றார்கள்.இவ்வாறுஇருக்கையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிய கமல் திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டிருப்பதால் உடனே மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள்.
இவ்வாறுஇருக்கையில் தற்போது சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளதாகவும், ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென்று கமல்ஹாசனுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கமல்ஹாசன் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சந்தேகம் என்று கூறப்படுகின்றது.
ஏற்கனவே ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு, கமலுக்கு பதில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. அப்படி நடந்தால் நிச்சயம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் பயங்கர அடி வாங்கும்.
அத்தோடு கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் KH 233 மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் KH 234 ஆகிய படங்களிலும் நடிக்க உள்ளார். ஆகையால் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களும் தள்ளிப் போக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகின்றது.
ஏனெனில் அவரது உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் அடுத்த படங்களுக்கு கால இடைவெளி வேண்டும். ஆகையால் கமல்ஹாசனின் இந்த நிலையை கேட்டதும் மொத்த தயாரிப்பாளர்கள் தலையில் இடியை இறக்கியது போல் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்களாம்.