Thursday, December 26, 2024
HomeLatest Newsசெப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு நீதி!

செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு நீதி!

அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டார் என தகவல் வெளியானது.

குறிப்பாக, அல்-கொய்தா இயக்க தலைவர் அல்-ஜவாரி கொல்லப்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும். இரட்டைக் கோபுர தாக்குதலை என்றுமே மறக்க மாட்டோம். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு என கூறினார்.

Recent News