Friday, November 15, 2024
HomeLatest Newsஉலக வரலாற்றில் அதிகளவு வெப்பமான மாதம் ஜூன்..!நாசா அறிக்கை..!

உலக வரலாற்றில் அதிகளவு வெப்பமான மாதம் ஜூன்..!நாசா அறிக்கை..!

உலக வரலாற்றிலேயே அதிகளவான வெப்பம் பதிவான மாதம் ஜூன் என நாசா தெரிவித்துள்ளது.

எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா தெரிவித்துள்ளது.

அதாவது, ஜூன் 2023 ற்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 ஜூன் வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில், மனித நடவடிக்கைகளின் விளைவாக, முக்கியமாக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் விளைவாக, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையின் ஒரு பகுதி என நாசா தனது அறிக்கையில் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News