Monday, January 27, 2025
HomeLatest Newsஅமெரிக்கா – இஸ்ரேல் இடையே கூட்டு இராணுவப் பயிற்சி!

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கூட்டு இராணுவப் பயிற்சி!

இஸ்ரேல் பால்டிக் நாடுகளின் எதிர்ப்புக்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அமெரிக்காவுடன் இணைந்து கோடைக் கால இராணுவப் பயிற்சிகளை மேற் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணைப் பிரிவும், அதேபோன்று அமெரிக்க இராணுவத்தின் ஏவுகணைப் பிரிவும் இணைந்து மேற்படி பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாவும், குறிப்பாக ஈரானின் அச்சுருத்தல்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு அதிகளவில் காணப்பட்டு வரும் நிலையில் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை ஈரானுக்கெதிரான அமெரிக்காவின் அணு சக்தி தடையுத்தரவு தொடர்பான பல கட்டப் பேச்சு வார்த்தைகள் முடிவின்றி தொடரும் நிலையில் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் அணு சக்தி தொடர்பில் இறுதி தீர்மானத்தை அமெரிக்கா எடுக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்ற அதேவேளை ஈரான் அமெரிக்காவின் நகர்வுகளுக்கு முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News