நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ஜப்பானால் அனுப்பப்பட்டுள்ள ஸ்லிம் என்ற விண்கலம் அதன் சுற்றுவட்டப் பாதையில் திங்கள்கிழமை வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
இந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டால் அமெரிக்கா ரஷியா சீனா இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5-ஆவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறும்.
நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டா் பரப்புக்குள் துல்லியமாகத் தரையிறங்கும் வகையில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம் நிலவின் ஸ்னைப்பா் என்று அழைக்கப்படுகிறது.