பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்வதை தடை விதிப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுக் கழிவு நீரை கடலில் விடுவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சீனா இந்த முடிவை எட்டியுள்ளது.
அத்துடன், ஜப்பானின் ஏனைய பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்ற உணவுப் பொருட்களும் மிகவும் கடுமையான கதிர்வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் சீனாவின் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2011 ஆம் ஆண்டு சுனாமியால் அழிவடைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தில் 1.33 மில்லியன் கனமீட்டர் கழிவு நீரை உலக தரத்தின் படி அப்புறப்படுத்துவதற்கு சர்வதேச அணுசக்தி முகாம் சமீபத்தில் ஜப்பானுக்கு அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.