Friday, November 15, 2024
HomeLatest Newsஇலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேம்படுத்தும் ஜப்பான்!

இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேம்படுத்தும் ஜப்பான்!

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் யுயுகி யோகோஹரி நேற்று முன்தினம் (19) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இதன்போது, சுமுகமான சந்திப்பின் போது பல கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் பிரச்சினைக்குரிய பொதுவான விடயங்கள் விவாதிக்கப்பட்டது.

மேலும் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் யுயுகி யோகோஹாரி ஆகியோர் இந்த சுமூக சந்திப்பின் போது இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு போன்றவற்றை நினைவு கூர்ந்தனர்.

இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வெவ்வேறு பரிமாற்றம் மற்றும் பயிற்சி தொகுதிகளில் இரு நாடுகளின் இராணுவங்களின் பங்கேற்பு குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

சுமூகமான சந்திப்பின் முடிவில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் கௌரி இமாய் மற்றும் உதவி இராணுவ செயலாளர் பிரிகேடியர் புத்திக பெரேரா ஆகியோரும் அன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Recent News