Friday, April 4, 2025
HomeLatest Newsபிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜனனியின் உருக்கமான பதிவு!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜனனியின் உருக்கமான பதிவு!

பிக்பாஸ் சீசன்6  நிகழ்ச்சிதற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இலங்கைப் போட்டியாளரான ஜனனி நேற்றையதினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதேவேளை இவரது வெளியேற்றம் ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர், முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனனி பகிர்ந்துள்ள பதிவு அதிகம் வைரலாகி வருகிறது.

குறித்த பதிவில்,

‘பிக்பாஸ் வீட்டில் நான் இருந்த போது என்னை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் வாக்குகளால் என்னை அதிக அளவு ஊக்கப்படுத்தி உள்ளீர்கள்.

உங்களது எதிர்பார்ப்புகளை இத்தனை நாட்களில் என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் உங்கள் அனைவரையும் என்னால் முடிந்த எல்லா வழிகளிலும் மகிழ்விப்பேன். மிக்க நன்றி’ என ஜனனி குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஜனனியின் பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு ஜனனிக்கு ஆதரவாக பலரும் தமது கொமண்ஸ்களை வழங்கி வருகின்றனர்.

Recent News