Monday, December 23, 2024
HomeLatest Newsஜனனியின் பித்தலாட்டம்! குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய பிக்பாஸ்

ஜனனியின் பித்தலாட்டம்! குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனிடம் ஜனனி, மற்றும் தனலட்சுமி இருவரும் பொய் கூறி வாக்குவாதம் செய்யும் காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற சொர்க்கம், நரகம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்கில் இறுதியில் தேவதையாக இருப்பவர்கள் அடுத்த வார எலிமினேஷலிருந்து தப்பிக்க முடியும் என்று பிக்பாஸ் கூறினார்.

அதன்படி போட்டி நடைபெற்ற நிலையில், தற்போது ஜனனி மற்றும் தனலட்சுமி இருவரும் பொய் கூறி விக்ரமனிடம் சண்டையிடுகின்றனர்.

அதாவது ஜனனி தானே முதலில் ஷார்ட்கட் வழியின் முடிவை தொட்டதாக கூறி வாதாடுகின்றார். இந்த ப்ரொமோ கடைசியில் பிக்பாஸ் குறும்படம் போட்டும் காட்டியுள்ளார்.

இதில் இலங்கை பெண் ஜனனி மற்றும் தனலட்சுமி இருவரும் விக்ரமனிடம் பொய் கூறியது அப்பட்டமாக காணமுடிகின்றது. இதில் விக்ரமன் கூறியது தான் உண்மை என்று கூறியுள்ளனர்.

Recent News