Monday, January 27, 2025
HomeLatest Newsதனலட்சுமியை அழவைத்த ஜனனி-இது தான் காரணமா..வெளியானது லேட்டஸ் ப்ரமோ..!

தனலட்சுமியை அழவைத்த ஜனனி-இது தான் காரணமா..வெளியானது லேட்டஸ் ப்ரமோ..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களும் இடம் பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

இவ்வாறு விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.

அத்தோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் பிக்பாஸ் போட்டியாளர்களை 4 அணிகளாக பிரித்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் ஒரு குழுவின் தலைவி ஜனனி எல்லோர் முன் வந்தும் பேசும் போது எங்க டீமை யார் சூனியம் பண்ணினது என்று தெரியலே எனக் கூறும் போது எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதன் பின் ஒரு போட்டியாளரை Swap பண்ணுறதிற்கு தனலட்சுமியை சொல்கிறார் ஜனனி.அது என்னவென்றால் ஜி.பி.முத்து கோபப்பட்டு இருந்தாலும் அவர் எங்களுக்கு அப்பா மாதிரி ஸ்தானத்தில் உள்ளார்.

அவரிடம் தனலட்சுமி கோபப்பட்டது எனக்கு பிடிக்கவில்லை. அதனால் தனலட்சுமியை நான் Swap பண்ணுறேன் எனக் கூறுகின்றார்.

இதனால் கோபமடைந்த தனலட்சுமி எழுந்து தனியாகப் போய் நான் பிக்பாஸ் வீட்டுக்குள் வராமலே விட்டு இருக்கலாம் எனக் கூறி அழுகின்றார்.

Recent News