Monday, December 23, 2024
HomeLatest Newsஇளவரசியாக மாறிய ஜனனி!...அரண்மனை போல் மாறிய பிக்பாஸ் வீடு ....வைரலாகும் புகைப்படங்கள்

இளவரசியாக மாறிய ஜனனி!…அரண்மனை போல் மாறிய பிக்பாஸ் வீடு ….வைரலாகும் புகைப்படங்கள்

பிக் பாஸ் வீட்டில் படுக்கை அறை முதல் அனைத்து இடங்களும் திடீரென்று மாற்றப்பட்டு அரச மாளிகையாக ஜொலித்து காட்சி அளிக்கின்றது .

பிக் பாஸ் வீட்டில் ராஜா ராணி டாஸ்க் நடைபெற உள்ளது. இந்த டாஸ்கிலும் சுவாரசியங்களுக்கு பஞ்சம் இருக்காது போல் தெரிகின்றது.

ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும் ராணியாக ரச்சிதாவும் உள்ளனர்.இளவரசியாக இலங்கை பெண் ஜனனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனனி இளவரசியானதால் அவர் இந்த டாஸ்க்கில் எப்படி செயல்பட போகிறார். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாரா இல்லை. இந்த வாய்ப்பையும் நழுவ விட்டுவிடுவாரா என்பது இனி தான் தெரியும்.

மேலும், இந்த டாஸ்க்கில் படை தளபதியாக அசீமும், அமுதவணன் தானாக வந்து சேவகராகவும் பொருப்பு எடுத்து கொண்டனர்.

அதே போல மற்றும் சிலருக்கு சிறுசிறு வேடங்கள் உள்ளது. கதாபாத்திரங்கள் தெரிவுக்கு எல்லா பெயரை அறிவிக்கும் போதும் மைனா சென்று நின்றார். எனினும், அவரை யாரும் தெரிவு செய்யவில்லை.

இலங்கை பெண் ஜனனி இளவரசியாக இருக்கும் போது தனலட்சுமி சேவகியாக உள்ளார். எனவே நிச்சயம் மோதல் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வாரம் பெரிய சம்பவம் காத்திருக்கின்றது.

அது ஒரு புறம் இருக்க ராஜா ராணி டாஸ்க்கிற்காக ஒட்டுமொத்த பிக் பாஸ் வீடும் நொடியில் மாற்றப்பட்டு அரண்மனையாக மாறியுள்ளது. அதேசமயம் நிச்சயமாக மோதல்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News