Wednesday, December 25, 2024
HomeLatest Newsபல இலட்சம் ரூபாய்க்கு அதிபதியான ஜனனி! பிக்பாஸ் கொடுத்த அதிரடி டுவிஸ்ட்

பல இலட்சம் ரூபாய்க்கு அதிபதியான ஜனனி! பிக்பாஸ் கொடுத்த அதிரடி டுவிஸ்ட்

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறிய இலங்கை பெண்ணின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

மேலும் இதுவரைக்கும் வாக்குகள் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.ஆனால் இந்த வாரம் குலுக்கல் முறையில் போட்டியாளரை வெளியேற்றியுள்ளார்.

இதன்படி, வாக்குகள் அடிப்படையில் மணிகண்டன் குறைவான வாக்குகள் பெற்று தயாராக இருக்கும் போது பிக் பாஸ் புதிய டுவிஸ்ட்டை ஏற்படுத்தி, ஜனனியை வெளியேற்றுள்ளது.

இந்த தகவல் ஜனனி ஆர்மி மற்றும் ஜனனி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் வெளியேறிய இலங்கை பெண்ணிற்கு ஒரு நாளைக்கு ரூ. 21 முதல் ரூ. 26 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதன்படி, இவர் பத்து இலட்சம் ரூபாய்க்கு மேல் தான் சம்பளம் வாங்கிச் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் லக்கினால் பல இலட்சம் ரூபாய் அதிபதியான இலங்கை பெண் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Recent News