Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஜம்மு காஸ்மீர் விவகாரம் -சர்ச்சையில் சிக்கிய பிபிசி..!

ஜம்மு காஸ்மீர் விவகாரம் -சர்ச்சையில் சிக்கிய பிபிசி..!

காஷ்மீரின் அரசியல் நிலைமை குறித்த சமீபத்திய பிபிசி அறிக்கை இந்தியாவில் சர்ச்சைக்குரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. “Any story could be your last – India ‘s crackdown on Kashmir Press” என்ற தலைப்பிலான அறிக்கையே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது .

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பிபிசிக்கு எதிரான ‘தவறான அறிக்கை’ வழக்கை சிறப்பு புலனாய்வு முகமை (எஸ்ஐஏ) பிரிவுக்கு பரிந்துரைத்தபோது இந்த சர்ச்சை மேலும் அதிகரித்தது.

இதனை தொடர்ந்தே இந்த நிலைமை அரசியல் வல்லுநர்கள் மற்றும் தலைவர்களிடையே ஒரு சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது, இது பத்திரிகை தேசிய பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான சமநிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Recent News