Tuesday, December 24, 2024
HomeLatest Newsயாழ் போதனாவில் “உடனடி அழைப்பு மருத்துவ அறை” வேண்டும் – மருத்துவர்கள் கோரிக்கை

யாழ் போதனாவில் “உடனடி அழைப்பு மருத்துவ அறை” வேண்டும் – மருத்துவர்கள் கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 39வது நோயாளிகள் விடுதியில் “உடனடி அழைப்பு மருத்துவ அறை” வேண்டும் என,நிர்வாகத்திடம் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மருத்துவராகிய நாம் 39வது நோயாளிகள் விடுதியில் (வொர்ட்) பணிபுரிகின்றோம்.நாம் இந்த 39வது நோயாளிகள் விடுதியில் பணி புரிகின்றபோது பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றோம்.

நாம் இந்த நோயாளர்கள் விடுதியில் தங்கியிருந்து அவசர நோயாளிகளை கவனிப்பதற்கும், பராமரிப்பதற்கும் எமக்கு இந்த 39வது நோயாளிகள் விடுதிக்குள் ஒரு “உடனடி அழைப்பு” அறை தேவைப்படுகின்றது.

எனவே இந்த தாழ்மையான வேண்டுகோளை ஏற்று விரைவில் எமது தேவையினை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

குறித்த கடிதத்தில் 6 மருத்துவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு,மருத்துவமனை நிர்வாகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Recent News