Saturday, January 25, 2025
HomeLatest Newsபிரித்தானிய மக்களின் பேராதரவுடன் யாழ்ப்பாணத்து தமிழர் கவுன்சிலராக தேர்வு...!

பிரித்தானிய மக்களின் பேராதரவுடன் யாழ்ப்பாணத்து தமிழர் கவுன்சிலராக தேர்வு…!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவில் இடம்பெற்ற உள்ளுராட்சி தேர்தலில் அபார வெற்றியீட்டி இருப்பது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் செயின்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் பயின்ற ஜெய் கணேஷ் என்பவரே இவ்வாறு கவுன்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு இந்து கல்லூரியில் தனது படிப்பைப் நிறைவு செய்த பின்னர் இங்கிலாந்தில் கடந்த இருபத்திரெண்டு வருடங்களாக சுற்றுலாத்துறை, உள்ளூராட்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே சார் துறைகளில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பிரித்தினியாவில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கவுன்சிலர் ஜெய் கணேஷ் மீண்டும் அபார வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பிரித்தினியாவில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் நாடளாவிய ரீதியில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் பாரிய தோல்விகளை சந்தித்திருந்தாலும், கவுன்சிலர் ஜெய் கணேஷ், அவரது ஷெர்போர்ன் செயின்ட் ஜான் மற்றும் ரூக்ஸ்டவுன் தொகுதியில் லேபர், லிப் டெம் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் அதிகாரமில்லாத கௌரவ மேயர் பதவிகளை பல தமிழர்கள் வகித்திருந்தாலும், கவுன்சிலர் ஜெய் கணேஷ் மட்டுமே கபினட் அந்தஸ்துள்ள கவுன்சிலராக பதவி வகித்து வருகின்றார்.

கவுன்சிலர் ஜெய் கணேஷ் கடந்த ஆண்டு 963 ஆக இருந்த வாக்குகளை இந்த ஆண்டு 1049 ஆகவும், 45.7% ஆக இருந்த வாக்குப் பங்கை 46.6% ஆகவும் மற்றும் 135 ஆக இருந்த பெரும்பான்மையை 175 ஆக உயர்த்தியுள்ளார்.

கவுன்சிலராக தெரிவான பின்னர் ஜெய் கணேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“ஷெர்போர்ன் செயின்ட் ஜான் மற்றும் ரூக்ஸ்டவுன் தொகுதியில் கன்ஸர்வேட்டிவ் வேட்பாளரான தன் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்து மீண்டும் உங்கள் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுத்தமைக்கும், தன்னுடைய கட்சி இந்த உள்ளூராட்சி தேர்தலில் நாடளாவிய ரீதியில் பின்னடைவுகளை சந்தித்திருந்தாலும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி, தான் வாழும் தொகுதிக்கு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை பெருமிதமாக கருதுவதாகவும், வாக்களித்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு அக்கறையுடன் செயற்படுவேன் என்றும் பேசிங்ஸ்டோக் மற்றும் டீன் நகர சபையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் ” என்றும் தெரிவித்துள்ளார்.

Recent News