Thursday, December 26, 2024
HomeLatest Newsயாழ். கந்தரோடையில் புதிதாக விகாரை - எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்த மக்கள்..!

யாழ். கந்தரோடையில் புதிதாக விகாரை – எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்த மக்கள்..!

யாழ். கந்தரோடையில் தனியார் காணியைக் கொள்வனவு செய்துள்ள பிக்கு அதில் விகாரை அமைப்பதற்கு எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

கந்தரோடையில் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பிற்கு எதிராக தமிழ்த் தேசியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் கந்தரோடையில் இன்று (7) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

கந்தரோடையிலுள்ள தொல்பொருட் சின்னங்கள் காணப்படும் இடத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, விகாரை அமைக்கப்படவுள்ள இடம் வரை போராட்டம் நகர்ந்து அவ்விடத்திலும் போராட்டம் இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கெடுத்தனர்.

Recent News