Thursday, December 26, 2024
HomeLatest Newsயாழ் சர்வதேச விமான நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ் சர்வதேச விமான நிலைய சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

யாழிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்றையதினம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்நிலையில் அங்கு உரையாற்றிய நிமல் சிறிபால டி சில்வா,

ஜூலை 1ம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் மீளவும் ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் தெரிவித்தார்.

அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமான மூடாக வருகை தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recent News