Friday, December 27, 2024
HomeLatest Newsஇலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ள இத்தாலி!

இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ள இத்தாலி!

இத்தாலியின் நியோஸ் ஏர்லைன்ஸ் கொழும்புக்கும் இத்தாலிக்கும் இடையே வாராந்திர மூன்று விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தக் கோடையில் இருந்து இந்தப் பாதையில் வாராந்த மூன்று விமானங்களை இயக்க நியோஸ் ஏர்லைன்ஸின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இத்தாலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு இந்த வாரம் அறிவித்தது.

நியோஸ் எயார் ஏற்கனவே இலங்கை வான்பரப்பில் வர்த்தக விமானங்களை இயக்குவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட வெளிநாட்டு விமானச் செயற்பாடுகள் சான்றிதழை கொண்டுள்ளது.

எனினும், நியோஸ் ஏர் பாதையை மீண்டும் தொடங்குவதற்கான குறிப்பிட்ட திகதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் உள்ளனர். இதனால் இலங்கையர்களுக்கு மிகவும் பிரபலமான வெளிநாட்டு தொழில் இடமாக இத்தாலி உள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரிகள் இத்தாலிய சுற்றுலாவுக்கான சிறந்த பத்து மூலச் சந்தைகளில் ஒன்றாக இதை அடையாளப்படுத்தியுள்ளனர்.

ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இத்தாலியில் இருந்து 3,855 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது மொத்த வருகையில் 0.8% ஆகும்.

Recent News