Sunday, May 11, 2025
HomeLatest Newsஅவசர நிலையின் ஊடாக நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண முயல்வது சாத்தியமற்றது-சஜித் கண்டனம்.

அவசர நிலையின் ஊடாக நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண முயல்வது சாத்தியமற்றது-சஜித் கண்டனம்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவசர நிலையின் ஊடாக நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண முயல்வது சாத்தியமற்ற விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் நேற்றிரவு வௌியிட்ட டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 அத்துடன் அச்சம் மற்றும் வன்முறையின்றி இந்த சூழ்நிலையை கையாள முன்வர வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Recent News