அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாசாவுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணத்தின் போது நாசா மற்றும் இஸ்ரோ இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதன் மூலம், 2025 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் அமெரிக்க தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோ இணைந்து கொள்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.