Saturday, January 18, 2025
HomeLatest NewsWorld Newsசந்திராயன் 3 தொடர்பில் கவலை வெளியிட்டது இஸ்ரோ..!

சந்திராயன் 3 தொடர்பில் கவலை வெளியிட்டது இஸ்ரோ..!

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

பிரக்யான் ரோவர் அனுப்பும் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை இஸ்ரோ தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.இந்த நிலையில், சந்திரயான்3 அனுப்பும் புகைப்படங்கள் தெளிவாக இல்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

வளிமண்டலம் மற்றும் சூரிய ஒளியின் பற்றாக்குறை காரணமாகவும், நிலவில் உள்ள நிழல்கள் இருண்டதாக இருப்பதாலும் சந்திரயானில் இருந்து அனுப்பப்பட்ட படங்கள் தெளிவற்றவையாக உள்ளன என தெரிவித்தார்.

Recent News