Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsமத்திய காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் - 60 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

மத்திய காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் – 60 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

காஸாவின் வடக்கு, தெற்கு , மத்திய பகுதி என காசா முழுவதும் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குவதாக கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது.

தற்போது இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஆகிய இரண்டு தரப்பு நேருக்கு நேர் தரைவழியாக போரிட்டு வருவதால் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இது வரை 154 இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரத்தில் மாத்திரம் 15 இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உளள் மகாஜி அகதிகள் முகாம் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் குறைந்தது 60-க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 15 வீரர்களை இழந்ததையடுத்து,இந்த தாக்குதலில் மிகவும் அதிகப்படியான விலை கொடுக்க நேரிட்டது என இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News