Thursday, January 23, 2025
HomeLatest Newsகாசா மீது இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதல்ஒரே இரவில் 24 பேர் உயிரிழப்பு!

காசா மீது இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதல்ஒரே இரவில் 24 பேர் உயிரிழப்பு!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் நேற்றையதினம் இஸ்ரேலிய இராணுவம் காசா மீது மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் ஒரே இரவில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை காசா நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன் தினமும் இஸ்ரேலிய இராணுவம் ஷெல் தாக்குதல் மேற்கொண்டது.இதன்போது 10 குழந்தைகள் உட்பட 16 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதன்பின்னர் நேற்றையதினம்(23) மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் வீடொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 08 பேர் உயிரிழந்தனர்.

தீவிரவாதிகளை இலக்கு வைத்து காசா பகுதி முழுவதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.அதேவேளை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐரோப்பிய நாடுகளான அயர்லாந்து, நார்வே,ஸ்பெயின் ஆகியவை அறிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடுகளிலிருந்து தனது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.அத்துடன் காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் ஐ.நா வும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News