Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsமருத்துவமனையில் தங்கியுள்ள இஸ்ரேலிய படைகள் - 80 இடங்களில் சரமாரி தாக்குதல் !!!

மருத்துவமனையில் தங்கியுள்ள இஸ்ரேலிய படைகள் – 80 இடங்களில் சரமாரி தாக்குதல் !!!

காஸா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் தனது நடவடிக்கை தொடர்வதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.மேலும் இன்னும் சில நாட்களுக்கு மறுத்துவசேவைகள் துண்டிக்கப்படலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு படை மேலும் அறியத்தந்துள்ளது .காசா நகரில் அல்ஷிபா மருத்துவமனையின் சுற்றுப்புறத்தில், பல கட்டிடங்கள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த தினத்தில் மத்திய காசாவில் 15 போராளிகளை கொன்றதாக இராணுவம் கூறுகிறது. இதில் கான் யூனிஸ் பகுதியில் பல போராளிகளும் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த இராப்பொழுதில் மாத்திரம் இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் காசா முழுவதும் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு உட்பட சுமார் 80 இலக்குகளை தாக்கியது.மேலும் குறித்த தாக்குதலை நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தமை மட்டுமல்லாது பல சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

Recent News