Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsலெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிப்பு...!

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவிப்பு…!

லெபனானில் உள்ள இராணுவ தளங்கள் மற்றும் ஆயுதக் குழுவிற்கு சொந்தமான உள்கட்டமைப்புகள் உட்பட, ஹெஸ்பொல்லாவின் தொடர்ச்சியான இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.


லெபனானில் இருந்து தெற்கு இஸ்ரேலை நோக்கி 24 ராக்கெட்டுகள் சரமாரியாக
ஏவப்பட்டதாக ராணுவம் கூறியதை அடுத்து இந்த வான் தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஹெஸ்பொல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான துப்பாக்கிச் சூடு பரிமாற்றங்கள் பெரும்பாலும் எல்லையில் உள்ள பகுதிகளில் மட்டுமே இருந்த நிலையில், ஷியா ஆயுதக் குழுவிற்கு எதிரான தாக்குதல்களின் தீவிரம், மற்றும் வேகத்தை இஸ்ரேல் சமீபத்தில் அதிகரித்துள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து, நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 18 பொதுமக்களும், 110க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா போராளிகளும் இந்த பகுதிகளில்
மேட்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

Recent News