இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தமக்கிடையிலான இராஐதந்திர உறவின் 70 வருட நிறைவினை குறிக்கும் முகமாக இராணுவ தளபாட பாரிமாற்றங்களில் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
தற்போதைய சூழலில் பசுபிக் பிராந்தியத்தில் தாய்வான் மற்றும் சீனாவிற்கிடையிலான பதற்றங்கள் மூலம் யப்பானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் சீனாவினால் விடுக்கப்பட்டு வருகின்றது.
இரண்டாம் உலக போரிற்குப் பின்னர் ஆயுதங்களைத் தொட மாட்டோம் என வாக்குறுதியளித்திருந்த யப்பான் தற்போது தனது எல்லைகளை பாதுகாக்கும் வகையில் இராணுவத்தை பலப்படுத்தி வருவதோடு ஆயுதங்களையும் கொள்வனவு செய்யும் திட்டங்களில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் “பென்னி காண்டஸ்” அமெரிக்காவிற்கான தனது பயணத்தை நிறைவு செய்து யப்பானுக்கான தனது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன் போது பல பாதுகாப்பு மற்றும் இராணு தளபாடங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் இணைந்து செயற்படவுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக யப்பான் தனது பசுபிக் எல்லைகளை பாதுகாப்பதற்கு தேவையான நீண்ட தூர மற்றும் குறுந்தூர ஏவுகணைகள் உட்பட பல இராணுவ தளபாடங்களை இஸ்ரேல் வழங்கவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.