Friday, January 17, 2025
HomeLatest NewsWorld Newsஇஸ்ரேல்-ஹமாஸ் போர்- மார்ச் 10க்கு முன் ஆறு வார கால நிறுத்தம்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்- மார்ச் 10க்கு முன் ஆறு வார கால நிறுத்தம்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை நிறுத்தும் நோக்கில் பாரிஸில் நடைபெற்ற மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன ஊடக அறிக்கைகளின்படிஇ இஸ்ரேலின் ‘போர் அமைச்சரவை’ சனிக்கிழமை (பெப்ரவரி 24) பிற்பகுதியில் சமாதான முன்மொழிவை விவாதித்தது மற்றும் ஒப்பந்தத்திற்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்தது.

எவ்வாறாயினும்இ மேலதிக பேச்சுவார்த்தைகள் கத்தாரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதம் தொடங்கும் முன், மார்ச் 10ம் திகதிக்குள் போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஊடக அறிக்கைகளால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் ஆதாரங்களின்படி, அனைத்து பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது உட்பட இஸ்ரேலால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

ஒப்பந்தம் முறிந்தால்இ அதன் பாதுகாப்புப் படைகள் தற்போதைய தரைவழித் தாக்குதலை இரட்டிப்பாக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில்
வடக்கு காசாவில் இருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் உருவாக்கிய சமீபத்திய திட்டத்தில் ஹமாஸ் ஈடுபடவில்லை என்று அசோசியேட்டட் பிரஸ் மேற்கோளிட்டுள்ளது.எவ்வாறாயினும், ஹமாஸின் உயர்மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த வாரம் கெய்ரோவில் போர்நிறுத்தம் குறித்து விவாதித்துள்ளார்.ஹமாஸின் முந்தைய முன்மொழிவு, அறிக்கையிடப்பட்ட வரைவு ஒப்பந்தத்தை ஒத்த ஒரு ஆரம்ப கட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது.இது போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு வரக்கூடும் என்பதைக் குறித்துக் காட்டுவதாக வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Recent News